வெங்கட்பிரபு‌வின் இன்ஸ்பிரேஷன்!

புதன், 7 ஜனவரி 2009 (21:20 IST)
ஹாலிவுட் உள்பட வெளிநாட்டுப் படங்களிலிருந்து காட்சி முதல் கதை வரை 'சுட்டு'தான் கோடம்பாக்கத்தில் பலரும் படம் பண்ணுகிறார்கள். இதை ஒரு மரியாதைக்காகக் கூட அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.

இந்த விஷயத்தில் வெங்கட்பிரபு வித்தியாசமானவர். காட்சியையோ கதையையோ இவர் சுடுவதில்லை. ஆனாலும் தனது படத்துக்கு தூண்டுதலாக இருக்கும் படங்களை படப்பிடிப்புக்கு முன்பே கூறிவிடுவார். அவ்வளவு ஓபன்.

சரோஜா ஆரம்பிக்கப்பட்டபோது, பேபல் ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் சரோஜாவை இயக்குவதாக தெரிவித்தார். இத்தனைக்கும் பேபலுக்கும் சரோஜாவுக்கும் துளி ஒற்றுமையில்லை. வெங்கட்பிரபு எடுத்துக் கொண்டது பேபலின் திரைக்கதை யுக்தி மட்டுமே!

அடுத்து எழுதி இயக்கும் கோவா, ஹாலிவுட் படமான 'அமெரிக்கன் பை'யின் இன்ஸ்பிரேஷனாம். அமெரிக்காவில் வசூலை வாரிக் குவித்த இப்படம் டீன் ஏஜ் மாணவர்களின் இளமை கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டது. ஜாலியின் சிகரம். இதேபோன்று கோவாவும், ஜாலியான படமாக இருக்குமாம்.

அனுபவிக்க இப்போதே தயாராகிவிட்டோம்!

வெப்துனியாவைப் படிக்கவும்