தில், தூள், கில்லி என தமிழ் சினிமாவில் மூன்று கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் தரணி. தெலுங்கில் இயக்கிய பங்காரமும், தமிழில் இயக்கிய குருவியும் அடுத்தடுத்து சரியாகப் போகாதது, சின்ன சறுக்கல்.
பெரிய ஹீரோக்களுக்கு கதை செய்துவரும் தரணி, சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. கெளதம் படத்திலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, வேறு நல்ல இயக்குனரை சிவாஜி பிலிம்ஸ் தேடி வருகிறது.
விக்ரம், விஜய், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக இருப்பதால், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை தரணி இயக்குவார் என கூறப்படுகிறது.