எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மகன் எஸ்.பி.பி. சரணின் பட நிறுவனமான கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சென்னை-28 படத்திற்குப் பிறகு தயாரிக்கும் படம் குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்.
இப்படத்தின் இயக்குனர் ராஜ்மோகன். ராஜகுமாரன், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஆகியோருடன் உதவி இயக்குனராக இருந்தவர். புதுமுகங்களை வைத்து இயக்குகிறார்.
இதையடுத்து இக்கம்பெனி இயக்கும் படம் நாணயம். ஏற்கனவே பரமபதம் என்ற டைட்டில்தான் இப்போது நாணயமாக மாறியிருக்கிறது. பிரசன்னா ஹீரோவாக நடிக்க, அசத்தலான வில்லனாக நடிக்கிறார் சிபிராஜ்.
ஏன் வில்லன் வேடம் என்று கேட்டால் நடிகனென்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். வில்லனாகவும் ஸ்கோர் பண்ணுவேன் என்கிறார் சிபி.
இப்படத்தை வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஷக்தி இயக்குகிறார். சுப்ரமணியபுரம் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அப்படியென்றால் பாடல்கள் கண்டிப்பாக ஹிட்தான்.