'நான் கடவுள்' படம் எப்போது முடிந்து அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்போம் என்று காத்திருக்கும் ஆர்யா-பூஜா மட்டும் அல்லாமல் பாலாவின் உதவி இயக்குனர்களும்தான்.
ஆண்டுக் கணக்கில் படப்பிடிப்பை நடத்துவதோடு, போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவு ஆவதால் தயாரிப்பாளர்களும் கோபத்தில் உள்ளனர்.
நான் கடவுள் படத்தின் கோ-டைரக்டர் சிங்கம்புலி. இவர் ஏற்கனவே அஜித் நடித்த ரெட் படத்தையும், சூர்யா-ஜோதிகா நடித்த மாயாவி படத்தையும் இயக்கியவர்.
அத்தோடு காமெடி டிராக் சொல்வதில் கில்லாடி. அப்படிப்பட்டவர் தற்போது ஒரு காமெடி கதையை தயார் செய்து படமாக்குவதில் முயற்சி செய்யலாம் என்றால்... நான் கடவுள் படம் வெளியாகாமல் எந்த சொந்த வேலையும் செய்ய முடியாது என்பதால் படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். நியாயத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு தாவாமல் இருக்கிறார் இந்த சிங்கம்புலி.