யார் யாரோ இயக்கப் போவதாக பேச்சு அடிபட்டு விஜயின் 50வது படத்தை இயக்கப் போவது மலையாள இயக்குனர் சித்திக் என்று முடிவாகிவிட்டது.
அதேபோல் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கப் போவது வெங்கட்பிரபு என்று பேச்சு அடிபட்டது. பின் அவரில்லை என்று முடிவானது. அதுவும் ஏகன் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் நல்ல கதையாக தேர்வு செய்து 50வது படத்தைக் கொடுக்க வேண்டி கதைகளைக் கேட்டதில்...
மதுர, அரசாங்கம் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ் சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப் போக... அவரையே இயக்குனராக போட ஆலோசித்து வருகிறார்.
இதன் காரணமாக அரசாங்கம் படத்தை இந்தியில் சஞ்சய் தத்தை வைத்து இயக்க முடிவு செய்திருந்ததைக் கூட தள்ளிவைத்துவிட்டு 'தல' தலையாட்டலுக்காக காத்துக் கிடக்கிறார் மாதேஷ்.
எப்படியும் சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் உள்ள 49வது படத்தை முடித்துவிட்டுத்தான் கால்ஷீட் கொடுப்பார் என்பதால்... அந்த கேப்பில் சஞ்சய் தத் படத்தை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார்.