கதைகளின் பஞ்சம்!

புதன், 7 ஜனவரி 2009 (20:59 IST)
இயக்குனர் செல்வா சொந்தமாக கதையை யோசிப்பதைக் குறைத்துக் கொண்டு ஏற்கனவே ஓடிய வெற்றிப் படங்களை மாற்றி இயக்குவதிலேயே குறியாக இருக்கிறார்.

புதியதாக யோசித்து ஓடுமா... ஓடாதா? என்று கலங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏற்கனவே வெற்றி பெற்ற கதைகள் என்றால் ஐம்பது சதவிகித வெற்றி உறுதி என்கிறார் செல்வா. அதுவுமில்லாமல் அப்படி ரீ-மேக் செய்த 'நான் அவனில்லை' படம் வெற்றி கொடுத்த நம்பிக்கையாலும்தான் இந்த முடிவு.

அதன்படி தற்போது அதே ரீ-மேக் பாணியில் 'நூற்றுக்கு நூறு' என்ற பழைய படத்தை ரீ-மேக் செய்து கொண்டிருக்கிறார். அத்தோடு அப்படத்தில் இடம்பெற்ற 'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' என்ற பாடலும் ரீ-மிக்ஸில் வரவிருக்கிறது.

இந்த நூற்றுக்கு நூறு முடிந்ததும், கமல்-ஸ்ரீதேவி நடித்து பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தையும் இயக்க முடிவு செய்திருக்கிறார்.

இப்படி எல்லா இயக்குனர்களும் பழைய படங்களையே தேடிப் போனால் கதாசிரியர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். தற்போது ஒன்றிரண்டு கதாசிரியர்கள்தான் இருக்கிறார். இனி அவர்களும் கதையை மட்டும் யோசிக்க மாட்டார்கள், இயக்கமும் சேர்த்தேதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்