அதிர்ஷ்டம் எப்போது எந்த வடிவில் எந்த வயதில் வரும் என கூற முடியாது. காலம் போன காலத்தில் பரவை முனியம்மாவுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது, தூள் படத்தில். இதில் சிங்கம்போல பாடலை பாடிய பிறகு, பாடல், நடிப்பு என உலக பிஸியானார் பரவை முனியம்மா.
நாக்க முக்க பாடல் மூலம் அந்தப் பாடலை பாடிய சின்னப் பொண்ணையும் அதிர்ஷ்டம் ஆரத்தழுவியிருக்கிறது. மலையன், மகனே மருமகனே படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கும் இவருக்கு வாய்ப்புகள் கொட்டுகின்றன.
பேரரசுவின் திருவண்ணாமலையில் இடம்பெறும் ஓட்டுக் கேட்கப் போறாங்க பாடலை, புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடியிருக்கிறார் சின்னப் பொண்ணு.
இன்னொரு நாக்க முக்க என்கிறார்கள் பாடலைக் கேட்டவர்கள்.