ஏகனுக்கு ஐந்தாவது இடம்!

புதன், 7 ஜனவரி 2009 (20:44 IST)
தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் ஏகனுக்கு இங்கிலாந்து பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடம் என்றால் பெரிய விஷ­யமாயிற்றே என்று ஆச்சரியப்பட வேண்டாம். இந்திய படங்களில்தான் ஐந்தாவது இடம்.

உள்ளூரை போலவே வெளிநாடுகளிலும் ஏகனுக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. யு.கே. பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரம் 25வது இடத்தில் இருந்த இப்படம் இந்த வாரம் 37வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏகனின் மொத்த வசூலும் அதிகமில்லை, 33.24 லட்சங்கள்தான். பில்லாவைவிட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்