பி.பி ஸ்ரீனிவாசுக்கு கமுகாரா விருது!

புதன், 7 ஜனவரி 2009 (20:43 IST)
பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாசுக்கு இந்த வருடத்துக்கான கமுகாரா விருது வழங்கப்படுகிறது.

மறைந்த பின்னணி பாடகர் கமுகாரா புருஷோத்தமன் நினைவாக பின்னணி இசையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வருடம்தோறும் கமுகாரா விருதும், 25,000 பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய திரைப்பட பின்னணியிசையில் பி.பி. ஸ்ரீனிவாஸ் இதுவரை புரிந்த சேவைகளுக்காக இந்த விருது இந்த வருடம் அவருக்கு வழங்கப்படுவதாக கமுகாரா பவுண்டே­ஷன் தலைவர் தெரிவித்தார்.

நவ.8 நடைபெறும் விழாவில் இந்த விருது பி.பி. ஸ்ரீனிவாசுக்கு வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்