சென்னையில் குழந்தைகள் திரைப்பட விழா!

புதன், 7 ஜனவரி 2009 (20:41 IST)
குழந்தைகளுக்கான திரைப்படங்களோ, குழந்தைகள் பற்றிய திரைப்படங்களோ தமிழில் குறைவு. சுத்தமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இதுபோன்ற மோசமான சூழலில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்தினால்...? நடத்துகிறவர்களை கொண்டாட வேண்டாமா.

எய்ட் இந்தியாவும், நாளந்தா வே என்ற அமைப்பும் இணைந்து சென்னையில் குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்துகின்றன. குழந்தைகள் தினமான நவ. 14 இந்த திரைப்பட விழா தொடங்குகிறது. நிறைவு பெறுவது டிச. 6.

ஆம், மொத்தம் 23 நீ...ண்ட நாட்கள். சென்னை பிலிம் சேம்பரில் திரைப்பட விழா நடைபெற உள்ளது.

எய்ட் இந்தியாவும், நாளந்தா வே இரண்டும் இணைந்து ஆர்ட் அரட்டை ஆர்ப்பாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த குழந்தைகள் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்