பகவத் கீதையின் வார்த்தைகளை மாற்றியதற்கு இந்து அமைப்பு ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நவ. 3ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. இந்த சந்திப்பின் போது மேடையில் வைக்கப்பட்டிருந்த மேடையில் கடமையை செய் பலனை எதிர்பார் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் புகழ்பெற்ற வாசகத்தை பலனை எதிர்பார் என மாற்றி எழுதப்பட்டிருந்தது.
இதற்கு இந்து மகா சபை உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பகவத் கீதை இந்துக்களின் புனித நூல். பல நூறு வருடங்களாக இதனை மக்கள் படித்து வருகிறார்கள். பலனை எதிர்பார் என சொன்னதன் முலம் தானொரு சுயநலவாதிதான் என்பதை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளார்.
ரஜினியின் ஆன்மீக சாயம் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. கீதையின் வார்த்தைகளை மாற்றும் அருகதை ரஜினிக்கு கிடையாது என்று அவ்அமைப்புகள் கூறியுள்ளன.
ரஜினி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்காவிடில் அவரது வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் எனவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.