காஸ்ட்லி விளையாட்டு!

புதன், 7 ஜனவரி 2009 (20:31 IST)
சரண் இயக்கும் மோதி விளையாடு கடைசி கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளைமாக்ஸை ஷூட் செய்து, சில பாடல் காட்சிகளையும் எடுத்தால் படம் முடிவடைந்துவிடும்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சரண் தனது டீமுடன் மலேசியா செல்ல உள்ளார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கோலாலம்பூ‌ரில் தொடர்ந்து பிறகு பாண்டிச்சே‌ரி சென்று மீண்டும் மலேசியாவில் தொடர உள்ளது. பாடல் காட்சிகளை துபாய் மற்றும் ஹாங்காங்கில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த உலக பயணத்தால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட எகிறியுள்ளது.

மோதி விளையாடு அல்ல ஓடி விளையாடு.

வெப்துனியாவைப் படிக்கவும்