தீபாவளிக்கு வெளியான படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது அஜித்தின் ஏகன்.
தீபாவளிக்கு ஏகன், சேவல், மேகம் என்று 3 படங்கள் மட்டுமே வெளியாயின. தீயவன் கடைசி நேர சிக்கலில் மாட்டிக் கொண்டதால் வெளியாகவில்லை.
3 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஃஸில் ஏகன் முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் ஐந்து நாட்களில் 91 லட்சங்கள் வசூலித்துள்ளது இப்படம். இந்த வருடம் வெளியான படங்களில் தசாவதாரத்திற்கு அடுத்து சிறப்பான ஓபனிங் ஏகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தில் ஹரியின் சேவல் உள்ளது. 3 நாட்களில் இப்படம் 32 லட்சங்களை வசூலித்துள்ளது. 3வது இடத்தில் காதலில் விழுந்தேன். இதன் சென்றவார வசூல் ஏறக்குறைய எட்டு லட்சம்.
நான்காவது இடத்தில் உள்ள சரோஜா சென்ற வாரம் ஐந்தரை லட்சங்கள் வசூலித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சக்கரக்கட்டி உள்ளது.
தீபாவளிக்கு வெளியான மேகம் டாப் 5 படங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.