இனி பிலிம் தேவையில்லை!

வியாழன், 30 அக்டோபர் 2008 (17:43 IST)
பிலிம் இல்லாமல் படம் எடுக்கலாம் என்பதுதான் தற்போதைய சினிமா வட்டாரத்தின் பரபரப்பு.

ஆயிரக்கணக்கான அடிகள் பிலிம் செலவு செய்து தயாரிப்பாளர்களின் பிபி-யை அதிகரிக்க செய்யும் அச்செலவே இல்லாமல் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது ஆரிடி21 என்ற தொழில்நுட்ப கேமரா.

ஜெர்மன் நாட்டு தயாரிப்பான இந்த நவீன டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர்களுக்கும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

எத்தனை காட்சிகளவே‌ண்டுமானா‌ல் எடுத்துக்கொண்டு தேவையானதை எடிட் செய்யும் வசதி. அதுமட்டுமல்லாமல் பிரபலமான ஹாலிவுட் படங்களை இதுபோன்ற கேமராக்களில்தான் நுட்பத்துடன் படம் பிடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிலும் சில ஒளிப்பதிவாளர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு சாதாரண கேமராக்களைப் பயன்படுத்தி படம் பிடிக்கும் நிலையில் இந்த ஆரிடி 21 கேமராவின் வரவு பல ஒளிப்பதிவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதன் விலை இரண்டரை கோடி என்கிறபோது, நூறு கோடியில் படமெடுக்கும் தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு இத்தொகை ஒன்றும் பெரிதில்லை. சொந்தமாகவே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்