தீமையில் நன்மை!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:44 IST)
படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் மட்டும்தான் பாக்கி. அதற்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிலையில்தான் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது இயக்குனர் சுப்ரமணிய சிவாவுக்கு.

தற்போது இயக்குனர் அமீரை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் 'யோகி'. வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரையுலகினர் பொதுக் கூட்டத்தில் பிரிவினையை தூண்டியதாக அமீர், சீமான் இருவரை கைது செய்து சிறையிலடைத்தது அரசு. இதனால் யோகி படத்தின் வேலைகள் அப்படியே நின்றுபோனது.

நவம்பர் 7ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது கோர்ட். அதற்குப்பின் அமீர் வெளியே வந்தாலும் டப்பிங் பேசும் மனநிலையில் இருப்பாரா என்பது சந்தேகம்தான்.

இப்படி ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் கலக்கத்தில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு. ஆனாலும் படத்திற்கு இதுவும் ஒரு விளம்பரம்தான் என்பதில் கொஞ்சம் உற்சாகத்துடனும் இருக்கிறார் இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்