மலையாள இயக்குனர் வினயன் இயக்கும் தமிழ்ப் படம் நாளை நமதே. இவரது படங்கள் சராசரியான மனிதர்களை பற்றி பேசுபவை. அதிலும் உடல் ஊனமுற்றவர்களை பற்றி படம் எடுப்பதில் வினயனை அடிக்க ஆளில்லை.
நாளை நமதேயும் உடல் ஊனமுற்றவர்களை பற்றியதுதான். நீண்ட நாட்களுக்குப் பின் இதில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார் கிரண்.
சமீபத்தில் இவர் நடித்த பாடல் காட்சி சென்னை தீவுத் திடலில் படமாக்கப்பட்டது. குப்பத்து மனிதர்களுடன் கிரண் ஆடுவதுபோல் காட்சி. படப்பிடிப்பு நடப்பது அறிந்து தீவுத் திடலில் ஏக கூட்டம்.
வினயனுக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கும் ஏழாம் பொருத்தம். இவர் நடிகர் திலீப்புக்கு எதிராக கொண்டு வந்த தடையுத்தரவு மலையாள சினிமாவில் புயல் கிளப்பியதுடன் சங்கங்கள் இரண்டாக உடையும் அளவுக்கு பெரிதாக உருவெடுத்தது.
அந்த ஹீட்டிலிருந்து தள்ளியிருக்கவே நாளை நமதேயை தமிழில் இயக்குகிறார் என்கிறார்கள்.