சினேகாவுக்கு பிடித்தமான நடிகர்களில் அமிதாப்பும் ஒருவர். அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸானால் எப்படி இருக்கும்?
அறுவடை படத்தில் பைலட்டாக நடித்து வருகிறார் சினேகா. மறுமலர்ச்சி ஹென்றி தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாரித்து வரும் இப்படத்தில் மம்முட்டி, அர்ஜுன் என ஒன்றுக்கு இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸில் வெயிட்டான ரோல் ஒன்று வருகிறது. இதில் நடிக்க அமிதாப்பிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருந்தார் படத்தின் இயக்குனர் அரவிந்தன். அமிதாப்புக்காகதான் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் வயிற்றுப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் அமிதாப். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் அறுவடையில் அமிதாப் நடிப்பது கேள்விக் குறியாகியுள்ளது. தற்போது வேறு பெரிய நடிகரை தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறது.