வியாழன், 23 அக்டோபர் 2008 (14:08 IST)
கடைசி நிமிடத்தில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது வாரணம் ஆயிரம்.
தீபாவளிக்கு ஏகன், சேவல், வாரணம் ஆயிரம் ஆகிய முன்று பெரிய படங்கள் மட்டுமே வெளியாவதாக இருந்தது.
அபியும் நானும், குரு என் ஆளு, எங்கள் ஆசான் உள்பட அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில் வாரணம் ஆயிரம் படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்றே படம் திரைக்கு வருகிறது.