அக். 19‌ல் திரைப்படக் காட்சிகள் ரத்து!

வியாழன், 16 அக்டோபர் 2008 (15:26 IST)
தமிழ் திரையுலகம் பத்தொன்பதாம் தேதி இலங்கை‌த் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் கண்டன பேரணி நடத்துகிறது. இதனை முன்னிட்டு அன்று தமிழகம் முழுவதும் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்.

நேற்று கண்டன பேரணி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. திரையிலகினரின் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களும், திரையரங்கு தொழிலாளர்களும் கலந்து கொள்கிறார்கள். அதனால் அன்று இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொள்கிறவர்களுக்காக தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்