வெள்ளி, 10 அக்டோபர் 2008 (17:56 IST)
மலையாளத்தில் வெளியான நந்தனம் படம் தமிழில் ரீ-மேக் செய்யப்படுவது தெரிந்ததே. இந்தப் படத்தில் ப்ருத்விராஜும், ப்ரியாமணியும் நடிக்கின்றனர்.
நந்தனத்தில் கடவுள் வேடம் ஒன்று வருகிறது. இதில் நடிக்க தனுஷ் ஒப்புக் கொணடதும் தெரிந்ததே.
இந்தப் படத்தை ஆஹா படத்தை தயாரித்த சோஹன் பிலிம்ஸ் மோகன் தயாரிக்கிறார். ஆஹாவுக்குப் பிறகு இவர் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் நந்தனத்தை இயக்கிய ரஞ்சித்தே தமிழ் ரீ-மேக்கையும் இயக்குகிறார்.