கடவுள் விஷயத்தோடு தங்கள் எல்லையை முடித்துக் கொள்ளும் மதவாத கட்சிகள் அவ்வப்போது பொதுப் பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும். பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லலாததால் இந்த மக்கள் கட்சி அப்படியொரு பிரச்சனையில் தனது மூக்கை நுழைத்துள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் உண்ணாவிதம் இருந்தபோது நடிகை திவ்யா அதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக தமிழர்களுக்கு போட்டியாக கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த திவ்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவர் நடித்த வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் டி. கண்ணன்.
தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட சூர்யா, கெளதம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை டி. கண்ணன் மற்றும் வகையறாக்கள் புரிந்துகொள்ள மறுப்பது விந்தையிலும் விந்தை!