எடுப்பதும் தெரியாது, தொடுப்பதும் தெரியாது, முடிப்பதும் தெரியாது. அதுதான் இயக்குனர் ஹரியின் ஸ்டைல். அப்படியொரு அசுர வேகத்தில் தயாராகியிருக்கிறது சேவல்.
பெயருக்கேற்ப படத்தில் நடித்த பூனம் பஜ்வாவோ, சிம்ரனோ விழாவில் தென்படவில்லை. ஒரே சேவல்கள் மயம்.
படத்தில் பரத்துக்கு சிம்ரனுடன் டூயட் உண்டாம். தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதற்கு ஹரிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் பரத். ஹரியின் வேகத்தை அவர் உதாரணத்துடன் விளக்கியது அருமை.
இசை வெளியீட்டுக்கான போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் ஜின்னாவே தெருவெங்கும் ஒட்டினார் என்ற அதிர்ச்சியான தகவலை கூறினார் ஹரி. பட்ஜெட் பற்றாக்குறை?
பொதுவாக என்னுடைய படங்களில் கமர்ஷியல் 70 சதமும், யதார்த்தம் 30 சதவீதமும் இருக்கும். சேவலில் யதார்த்தம் 70ம், கமர்ஷியல் 30 சதவீதமும் வைத்திருப்பதாக கூறினார் ஹரி.
விழாவில் இவையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கலந்து கோண்டார்.