பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம். சரி, சினிமாவுக்காக பிடித்தால்? அதற்கும் அபராதம் உண்டு.
திரைப்படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிகளே இளைஞர்களை கெடுக்கிறது என்பது அமைச்சர் அன்புமணியின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திரைப்படங்களில் வரும் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக தொடர்ந்து சாட்டையை சுழற்றி வருகிறவருக்கு பொது இடங்களில் விதித்திருக்கும் தடை அல்வா துண்டு.
திரைப்படங்களில் பொது இடங்களில் புகைபிடிப்பது போல் காட்சி வந்தால் அபராதம் செலுத்த வேண்டி வருமாம். இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஷாருக்கான், புகைபிடிப்பதை சட்ட விரோதமாக்கி புகைபிடிப்பவர்களை தூக்கில் போடலாம். ஆனால் இது ஜனநாயக நாடு என்பதால் அது முடியாது என கிண்டலாக தெரிவித்துள்ளார்.