அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணா, மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறார்.
மணிரத்னம் இயக்கும் புதிய படம் தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகிறது. இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கோவிந்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தமிழில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ப்ருத்விராஜ், ப்ரியாமணி, ஆகியோர் நடிக்கிறார்கள். விக்ரமின் தந்தையாக வேலு பிரபாகரன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் கிருஷ்ணா முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இது முதல்முறை அல்ல. அவரது அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.