ஈரம் படத்தின் வில்லி!

சனி, 27 செப்டம்பர் 2008 (20:34 IST)
பொய் சொல்ல போறோம் படத்தில் யார் இவர் என்று கேட்க வைத்தவர் ஹீரோவின் அம்மாவாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

பாலக்காடை சேர்ந்த இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மலையாள இயக்குனர் லோகிததாஸ். பொய் சொல்ல போறோம் இவருக்கு முதல் தமிழ் படம்.

ஏல்லாம் அவன் செயல், லீலை படங்களில் நடித்து வரும் இவர் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரிக்கும் ஈரம் படத்தில் வில்லியாக நடிக்கிறார்.

சமுத்திரகனியின் நாடோடிகள் படத்திலும் நடிக்கும் இவரது விருப்பம் ராதிகா, சுஹாசினி போல் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதுதானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்