ஸ்டண்ட் மாஸ்டர் சோமன் இயக்கும் படம் கடற்கரை. பெயரைப் பார்த்து மீனவப் படமோ என நினைத்தால் ஏமாந்தீர்கள். அக்மார்க் க்ரைம் த்ரில்லர் இது.
கடற்கரை ரிசார்ட் ஒன்றில் நாயகன் உதயா இருக்கும் போது கொலை ஒன்று நடக்கிறது. அந்த பழி விழுவது நிரபராதியான நாயகன் மீது. நாயகனுக்கோ சந்தேகம் நாயகி நிவேதிதா மீது. ஊண்மை குற்றவாளி யார் என்று நாயகன் இறுதியில் கண்டுபிடிக்கிறான்.
ரத்தமும் சத்தமும் படத்தில் அதிகம் இருக்குமோ என்ற பயத்தை இல்லாமல் செய்கிறது படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்.
முத்தம் தந்தால் சத்தம் வரலாம் மோகம் அடங்காது... நீ ஏட்டிப் போனால் இளமை நடத்தும் லீலை தொடராது...
நாயகன் உதயாவும், ரிஷாவும் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது.