அர்ஜுனன் காதலி – படப்பிடிப்பு தொடங்கியது!

சனி, 27 செப்டம்பர் 2008 (14:19 IST)
ஜெய் நடிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்கும் அர்ஜுனன் காதலி படத்தின் படப்பிடிப்பு திருப்பரங்குன்றத்தில் தொடங்கியது.

பார்த்தி பாஸ்க‌ரின் முருகன் பக்தி அனைவருக்கும் தெ‌ரியும். இந்தப் படத்திலும் முருகன் பாடலொன்றை வைத்துள்ளார். வாலி எழுதியிருக்கும் இந்தப் பாடலை முதலில் படமாக்குகிறா‌ரபார்த்தி பாஸ்கர்.

முருகனின் விருப்ப தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இப்பாடல் காட்சியை தற்போது எடுத்து வருகிறார். ஜெய் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கிறார்.

படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. சிவசக்தி பாண்டியன் படத்தை தயா‌ரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்