இந்தியன் தியேட்டர்ஸில் சரவணன்!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:04 IST)
மன்மதன் படத்தை தயா‌ரித்த கிருஷ்ணகாந்த் மீண்டும் படம் தயா‌ரிக்கிறார். அறிமுக இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மன்மதன், சொல்லி அடிப்பேன் படங்களின் நஷ்டத்தால் சில காலம் படத்தயா‌ரிப்பிலிருந்து கிருஷ்ணகாந்த் ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் புதுமுகம் சாய் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு சாஃப்டவேர் இன்‌ஜினியர். இவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சரவணன்.

படத்தின் முக்கியமான காட்சிகளை காரைக்குடியில் படமாக்குகிறார்கள். பி‌ரிவோம் சந்திப்போம் படத்தில் வரும் பிரமாண்ட வீடடில்தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

வேறு சில காட்சிகளுக்கு சென்னை ஸ்டுடியோவில் அரங்கு அமைக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் பாடல் கம்போஸிங் தொடங்குகிறது. ம‌ரியா மனோகர் படத்துக்கு இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்