சசியின் பெருந்தன்மை!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:04 IST)
இடமிருந்து வலம். அடுத்தப்படத்திற்கு சசி வைப்பதாக இருந்த பெயர். இந்தப் பெயரை‌த்தான் பயன்படுத்தப் போவதாக பூ இசை வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார் சசி.

ஆனால் அவர் பயன்படுத்தும் முன்பே புழக்கத்துக்கு வந்துள்ளது இப்பெயர். என்ன நடந்தது?

ஸ்ரீகாந்த், ப்ரு‌த்விரா‌ஜ் நடிக்கும் தெலு‌ங்கு படமான போலீஸ் போலீஸ் ஒரே நேரத்தில் தமிழ் தெலு‌ங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்திற்கு இடம் வலம் என பெயர் வைத்துள்ளார் இயக்குனர் மன்மோகன்.

இது தெ‌ரிய வந்ததும் சசியிடம் பேசியிருக்கிறர்ர் ஸ்ரீகாந்த். சசியும் பெருந்தன்மையாக டைட்டிலை விட்டுக் கொடுத்துள்ளார். தற்போது இடம் வலம் படப்படிப்பு புதுச்சே‌ரியில் நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்