கிரணை நினைவிருக்கிறதா. ஜெமினியில் விக்ரமுடன் தீவானா பாடியவர்? தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போனவர் திரும்ப வந்திருக்கிறார். எப்படி? ஒற்றை பாடலுக்கு ஆடுவதற்கு.
சினிமா வாய்ப்பு வற்றிப்போனாலும் ஒற்றை பாடலுக்கோ, டிவி சீரியலுக்கோ போக மாட்டேன் என்று ஒரு காலத்தில் சபதம் செய்தவர்தான் இவர். கிரண் சபதத்தை தளர்த்த காரணம் சுந்தர் சி.
ஏ. வெங்கடேஷ் இயக்கும் வாடா படத்தில் சுந்தர் சி. நடிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கிரணுக்கு அழைப்பு விடுத்தார் சுந்தர் சி.
வின்னர் படம் மூலம் கிரணின் கேரியரில் வெளிச்சம் பாய்ச்சியவராயிற்றே. அதனால் இந்த ஒருமுறை மட்டும் என்ற நிபந்தனையுடன் ஆட ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இதே படத்தில் குஷ்புவுடனும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் சுந்தர் சி.