வாரணம் ஆயிரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. சூர்யா, கெளதம் உள்ளிட்ட படத்தின் மொத்த டீமும் விழாவில் கலந்து கொண்டனர். கெளதம் காம்பியரிங் வேலையையும் பார்த்தது க்யூட்.
படத்தின் ட்ரெய்லரும், பாடல் காட்சி ஒன்றும் திரையிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஸ்பீடா மீட்டரை எகிற வைத்தன இரண்டும். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சூர்யா எடுத்துக் கொண்ட முயற்சிகளை தந்தைக்கேயுரிய பாசத்துடன் விவரித்தார் சிவகுமார்.
விழாவின் சர்ப்ரைஸ் விஜபி உதயநிதி ஸ்டாலின். இன்னொருவர் சௌந்தர்யா ரஜினி. வழக்கமாக பார்வையாளராக மட்டும் விழாவுக்கு வரும் அவர் மேடையில் பேசியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ், சத்யராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக குத்துப் பாடலொன்றையும் படத்தில் வைத்துள்ளார் கெளதம். படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
படத்தின் ஆடியோவை வெளியிட்டிருப்பவர்கள் சோனி பிஎம்ஜி நிறுவனத்தினர்.