தொண்டு நிறுவனம் தொடங்குகிறாரா ரஜினி?

ரஜினி மெளனமாக இருந்தால் அதையும் மொழிபெயர்க்க காத்துக் கொண்டிருக்றிர்கள் சிலர். அவர்களிடம், விரைவில் ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார் என்ற செய்தி அகப்பட்டால் போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்த மாட்டார்களா.

ரஜினி ரசிகர்களை சந்திப்பதையொட்டி அவரது வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள்.

ரசிகர்களை சமாதானப்படுத்த குரல் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. அவரது பெயரில் தொலைக்காட்சி தொடங்கும் திட்டமும் உள்ளதாம்.

இந்த முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் இருப்பவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி என்றொரு தகவலும் உள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் உள்ள இவருக்கு சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நீண்டதொரு கனவு.

இது ஒருபுறமிருக்க, சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினியிடம், அரசியலுக்கு வாங்க என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் சிரஞ்சீவி.

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் தினம் பூதங்கள் சில கிளம்பலாம் என்கின்றன இப்போதைய யூகங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்