விக்ரம் - மூமைத்கான் ஆட்டம்!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (20:02 IST)
சுசி. கணேசன் கந்தசாமிக்காக மெக்சிகோவில் பாடல் ஒன்றை படமாக்கினார். மெக்சிகோ காளை சண்டை பாணியிலான பாடல். காளை சண்டை வீரர் உடையில் விக்ரம். கவர்ச்சியான காளை (பசு?)யாக ஸ்ரேயா!

பாரின் ப்ளேவரில் அமைந்த இப்பாடலுக்கு இணையாக லோக்கல் ப்ளேவரில் ஒரு பாடல் படமானது. ஆடியவர்கள் விக்ரம், மூமைத்கான். தேவி ஸ்ரீபிரசாத் இசை.

தமிழ் சினிமாவின் சமீபத்திய விதிப்படி இது ஒரு ரீ-மிக்ஸ். சந்திரபாபு துள்ளி குதித்து ஆடும் பம்பரக் கண்ணாலே... காதல் சங்கதி சொன்னாளே.

தாணு தயாரிக்கும் கந்தசாமி தீபாவளிக்கு வெளிவரப் போவதில்லையாம். அடுத்த வருடம்தான் திரைக்கு வருகிறதாம் சீயானின் இந்தப் படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்