செப்.24 முதல் நாய்குட்டி!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (19:07 IST)
பிதாமகன் படத்தை தயாரித்த வி.ஏ. துரை அப்படத்திற்குப் பின் சிறிது நாள் படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிசினஸ் என்று தொழிலை மாற்றியவர் மீண்டும் தயாரிக்கும் படம் நாய்குட்டி.

பிரசன்னா நாய்குட்டியின் ஹீரோ. அமுல் பேபி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர், அஞ்சாதேயில் அதிரடி வில்லனாக அவதாரமெடுத்தார். படத்துக்குப் படம் வெரைட்டி கொடுக்க வேண்டும் என்ற வெறியில் இருப்பவருக்கு நாய்குட்டி நல்ல தீனி.

இதில் குப்பத்து இளைஞனாக இதுவரை ஏற்காத வேடம். கரடு முரடான கேரக்டர் என்பது கதையிலேயே தெரிகிறது. சந்தானம் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

நாளை நாய்குட்டியின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்