சுந்தர் சி - குஷ்பு டூயட்!

சுந்தர் சி அரை டஜன் படங்களை முடித்துவிட்டார். அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது.

கோபிகா, ஜோதிர்மயி, அஞ்சலி, நமிதா என கலர் கலரான அப்ஸரசுகளுடன் டூயட் பாடினாலும் ஒரு குறை. வீட்டுக்கார அம்மாவுடன் இதுவரை நடித்ததில்லை இவர்.

வாடா படத்தில் அந்த குறையை தீர்த்து வைக்க முன்வந்துள்ளார், இயக்குனர் ஏ. வெங்கடேஷ்.

இந்தப் படத்தின் நாயகி வேறொருவர் என்றாலும், ஒரேயொரு குத்துப் பாடலுக்கு குடும்பத் தலைவருடன் ஆடுகிறார் குஷ்பு. இதற்காக என்னடி ராக்கம்மா பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார்.

வாடாவின் ஹைலைட் இந்தப் பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்