சனி, 20 செப்டம்பர் 2008 (19:13 IST)
விநியோகத் துறையில் சன் நெட்வொர்க் கால் பதித்துள்ளது தெரியும். முதல் கட்டமாக காதலில் விழுந்தேன், தெனாவட்டு, சிவா மனசுல ஷக்தி, பூக்கடை ரவி ஆகிய படங்களின் ஒட்டுமொத்த உரிமையை சன் நெட்வொர்க்கின் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
விரைவில் தமிழ் ஒளிபரப்பைத் துவங்கும் ஸீ தொலைக்காட்சியும் சன் குழுமத்தின் வழியில் வினியோக உரிமைகளை வாங்கும் முடிவை எடுத்துள்ளது.
பாலாவின் எதிர்பார்ப்புக்குரிய படமான நான் கடவுளின் ஒட்டுமொத்த உரிமையை ஸீ வாங்கியுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சி புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையைப் போட்டி போட்டு வாங்குவதால் படங்களின் ஒட்டுமொத்த உரிமைகளை வாங்குகின்றன சன்னும் ஸீயும். ஓடுற முயலுக்கு ஒரு முழம் முன்னாள் கல் எறிவதுதானே வேட்டை ரகசியம்.
நான் கடவுளின் விநியோக உரிமைக்கு பதினாறு கோடி கொடுத்திருக்கிறது ஸீ.