கே.டி. குஞ்சுமோனின் காதலுக்கு மரணமில்லை!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (19:12 IST)
தொண்ணூறுகளின் முற்பகுதியில் தமிழ் சினிமாவில் புயலாக நுழைந்து புழுதியாக காணாமல் போனவர் கே.டி. குஞ்சுமோன். ஷங்கர் என்ற பிரமாண்ட இயக்குனரை அறிமுகப்படுத்திய மிஸ்டர் பிரமாண்டம்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோனவர் பீனிக்ஸாக திரும்பி வந்திருக்கிறார். பாலாஜி என்ற புதியவர் இயக்க, புதுமுகங்கள் நடிக்கும் காதலுக்கு மரணமில்லை படத்தை தயாரிக்கிறார்.

இவர் கடைசியாக பெரும் பொருட்செலவில் தயாரித்தது, கோடீஸ்வரன். அவரது மகன் எபி குஞ்சுமோன் நடித்தது. பைனான்ஸ் பற்றாக்குறையால் பாதியில் படம் நின்றது குஞ்சுமோனுக்கு விழுந்த பலத்த அடி. அவர் மீண்டும் படம் தயாரிக்க வந்துள்ளது. நொடிந்துப்போன பலருக்கு நம்பிக்கை அளிக்கும் நிகழ்வு.

காதலுக்கு மரணமில்லை... நம்பிக்கைக்கும்!

வெப்துனியாவைப் படிக்கவும்