எப்போது யோசிப்பார்... எப்போது எழுதுவார்... யாருக்கும் தெரியாது. தசாவதாரம் எனும் பிரமாண்டம் முடிந்து நூறு நாட்கள் தாண்டும் முன் அதைவிட பிரமாண்டமான மர்மயோகியின் முழு ஸ்கிரிப்டையும் முடித்து லொகேஷன்களையும் தீர்மானித்துவிட்டார் கமல்.
இம்மாதம் 26 ஆம் தேதி மர்மயோகியின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார் கமல் என்கின்றன அவரது அலுவலக வட்டாரத் தகவல்கள்.
படத்தின் போட்டோ செஷன் முடிந்துவிட்டதால் படப்பிடிப்புக்கு முன் கமலின் மர்மயோகி கெட்டப்பை பிரசுரிக்க பத்திரிக்கைகள் பரபரக்கின்றன.
மெகா பட்ஜெட் என்றாலும் அதிக நாள் இழுக்காமல் அடுத்த வருடமே மர்மயோகியை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கமல்.