வினய் ஜோடியானார் சந்தியா!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:09 IST)
பாலசந்தரின் நான் அவனில்லை பட‌த்தை ரீ-மேக் செய்து, தமிழில் ரீ-மேக் கலாசாரத்துக்கு பதியம் போட்டவர் இயக்குனர் செல்வா. இன்று பதியம் பந்தலித்து ஆலமரமாக வேர் விட்டிருக்கிறது.

பாலசந்தரின் மேலும் ஒரு படத்தை ரீ-மேக் செய்கிறார் செல்வா. இதற்காக அவர் தேர்ந்தெடுத்திருப்பது ஜெயசங்கர் நடித்த நூற்றுக்கு நூறு.

செல்வாவின் நூற்றுக்கு நூறில் ஜெய்சங்கர் நடித்த வேடத்தில் வினய் நடிக்கிறார். அவருக்கு ஐந்து ஜோடிகள். ஐந்தில் ஒருவர் சந்தியா. மற்ற நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

ஷக்தி சிதம்பரத்தின் ராஜாதி ராஜாவில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கேட்டு, சந்தியா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்