சொந்தக் குரல் த்ரிஷா, ஸ்ரேயா!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:07 IST)
ஒரு படத்தை விருது பிரிவுக்கு அனுப்புவதென்றால் அதில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசியதே அவர் தேசிய விருது பெற காரணம்.

தனது படங்களில் இதனை கறாராக பின்பற்றுகிறவர் கமல். ஹேராம் படத்தில் ஹாருக்கான், ராணி முகர்ஜி இருவரையும் சொந்தக் குரலில் தமிழ் பேசவைத்தார். தசாவதாரத்தில் அசினை அக்ரஹார தமிழ் பேச வைத்ததும் அவரே.

மர்மயோகியிலும் இது தொடர்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா இருவரும் டப்பிங் குரலில் காலம் தள்ளுகிறவர்கள். அவர்களுக்கு சரித்திர தமிழ் கற்றுக்கொடுத்து சொந்தக் குரல் பேசவைக்கப் போகிறாராம்.

நடிப்பை விட இது இருவருக்கும் கஷ்டம். ஆனாலும், கமல் சொன்னால் சொந்தக் குரலில் பேசித்தானே ஆகவேண்டும்.

கமலுக்கு சொந்தக் குரல் செம்மல் என்று பட்டமே தரலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்