அப்பாவாக பிரகாஷ்ராஜ். மகளாக த்ரிஷா. படம் முழுக்க போட்டி போட்டு நடித்துள்ளனர். அதனால்தானோ என்னவோ, அபியும் நானும் படத்தை விளம்பரப்படுத்த போட்டி ஒன்றை அறிவிக்க இருக்கிறார்கள்.
அபியும் நானும் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிட அவரது மகள் கனிமொழி எம்.பி. பெற்றுக் கொள்கிறார்.
கடைக்கு விற்பனைக்கு வரும் இந்த ஆடியோ சி.டி.யை நீங்கள் காசு கொடுத்து வாங்கினால், போட்டியில் கலந்துகொள்ளும் கூப்பன் கிடைக்கும், போட்டி இதுதான்.
குழந்தைகள் தங்கள் அப்பா எப்படிப்பட்டவர், அவருடனான உறவு எப்படிப்பட்டது என்பதை சுவாரஸ்யமான கடிதமாக எழுதி கூப்பனுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சுவாரஸ்யமான கடிதத்திற்கு எல்.சி.டி. டி.வி. பரிசு. அதுமட்டுமா? தேர்ந்தெடுக்கப்படும் குழந்தை அதன் அப்பாவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றலாம்.
பிரகாஷ் ராஜ் தனது மகளுடனும், இயக்குனர் ராதாமோகன் தனது குழந்தைகளுடனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.