விஜயகாந்தின் விருதகிரி

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (19:08 IST)
நடிகர், அரசியல் கட்சித் தலைவர் அவதாரங்களோடு மற்றொரு அவதாரமும் எடுத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். தனது சொந்த பேனரான கேப்டன் சி‌னி கிரியேஷன்ஸ் சார்பாக 'விருதகிரி' என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

'சுந்தரா டிராவல்ஸ்' படத் தயாரிப்பாளர் எஸ்.வி. தங்கராஜ் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் 'எங்கள் ஆசான்' படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், அடுத்து விக்ரமன் இயக்கும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்து இயக்கவிருக்கிறார் கேப்டன்.

இப்படம் இவரின் அரசியல் பிரவேசத்துக்கும், இவரின் தொண்டர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஏ. வெங்கடேஷ், இசை வேலுமணி, எடிட்டிங் சலீம்-வாசு, ஸ்டண்ட் ராக்கி ராஜேஷ், கலை ஜே.கே., பிரமாண்டமான பொருட் செலவில் எல்.கே. சுதீஸ் தயாரிக்கிறார்.

அடுத்தவர் இயக்கத்தில் நடிக்கும் படமே அமர்க்களப்படும் என்றால், தலைவர் இயக்கும் படம் என்பதால் மாவட்டம், ஒன்றியம், வார்டு அமைப்பாளர்கள் இப்போதே கொண்டாடத் தயாராகிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்