நான் பாலக்காட்டுப் பெண்!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:03 IST)
மலையாள இயக்குனர் பாஸில் தமிழில் வருஷம்-16, காதலுக்கு மரியாதை என்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இவர் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்தான் சரண்யா மோகன்.

தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்ததோடு 'பாலக்காட்டு பக்கத்திலே' என்ற பாடலுக்கு ஆடி யாருப்பா இந்தப் பொண்ணு? என்று கேட்க வைத்தவர்.

நடிப்பு, நடனம் இரண்டும் நன்றாக இருந்ததால் தொடர்ந்து படம் வர ஆரம்பித்து பிஸியாகிவிட்டார். அப்படி பிஸியானாலும் தன்னை அறிமுகம் செய்த பாஸிலை மறக்காதவர்... ஸ்பாட்டில் ஒருவரிடமாவது அவர் புகழை சொல்லாமல் இருக்கமாட்டார். அவ்வளவு குரு பக்தி.

தற்போது ஜெயம் கொண்டான் வெற்றி பெற்றிருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அதில் கிராமத்துப் பெண்ணாக நடித்தது வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

மேலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'வெண்ணிலா கபடிக் குழு' மற்றும் ஏவி.எம். படத்திலும் இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் ஈரம்.

கூல் புரொடக்சன் தயாரிக்கும் 'மகேஷ் சர‌ண்யா மற்றும் பலர்' ஆகிய படங்கள் மூலம் நல்ல நடிகை என்ற பெயரையும் அபிராமி ராமநாதன் தயாரிக்கும் 'பஞ்சாமிர்தம்' படத்தில் நல்ல காமெடியும் செய்கிறார் என்றும் பாராட்டு பெறப்போகிறாராம். வாங்க... வாங்க...

வெப்துனியாவைப் படிக்கவும்