'உ‌ச்சக‌ட்ட‌ம்' ஷூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (19:09 IST)
திருமலை ‌கி‌ரியேஷ‌ன்‌ஸ் சா‌ர்பாக ‌பி.எ‌ஸ். கோபா‌ல் தயா‌ரி‌க்கு‌ம் பட‌ம் 'உ‌ச்சக‌ட்ட‌ம்'. இத‌ன் பட‌ப்‌பிடி‌ப்பு செ‌‌ப்ட‌ம்ப‌ர் 11ஆ‌ம் தே‌தி‌யி‌லிரு‌ந்து தொட‌ர்‌ந்து நடைபெ‌ற்று வரு‌கிறது. ‌தி.நக‌ரி‌ல் உ‌ள்ள ஆட‌‌ம்பர ப‌ங்களா‌வி‌ல் நடிகை புளோரா, புதுமுக‌ம் ஜெ‌மி‌னி ஆ‌கியோ‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட படு‌க்கையறை‌க் கா‌ட்‌சிகளை பட‌ம் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்க‌ள். இதே லொகேஷ‌னி‌ல் தொட‌ர்‌ந்து 9 நா‌ட்க‌ள் நடைபெற இரு‌க்‌கி‌ன்றன.

எடு‌க்க‌ப்பட வே‌ண்டிய கா‌ட்‌சிகளை வேகமாகவு‌ம், தெ‌ளிவாக ‌விள‌க்‌கியு‌ம் நடி‌த்து‌க் கா‌ட்டி‌க்கொ‌‌ண்டிரு‌ந்தா‌ர் இய‌க்குன‌ர் ந‌வீ‌ன். இவ‌ர் கே.எ‌ஸ். ர‌வி‌க்குமா‌ரிட‌ம் இணை இய‌க்குனராக ப‌ணியா‌ற்‌றியவ‌ர். கேமராமே‌ன் செ‌ந்‌தி‌ல்குமா‌ர். ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர் எ‌ம்.எ‌ஸ். ‌பிரபு‌வி‌ன் உத‌வியாள‌ர். இசை ‌வி‌ஸ்வ‌ஜி‌த். மொ‌த்த‌ம் மு‌ப்ப‌த்தை‌ந்து நா‌ட்க‌ளி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பை முடி‌த்து வரு‌ம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் பட‌ம் வெ‌ளிவர இரு‌க்‌கிறது.

இ‌‌தி‌ல் மு‌க்‌கியமான ‌வி‌ல்ல‌ன் கேர‌க்ட‌ரி‌ல் இ‌ப்பட‌த் தயா‌ரி‌ப்பாள‌ர் கோபா‌ல் நடி‌க்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்