இசையமைப்பாளர், பாடகர் என்றிருந்த ஸ்ரீகாந்த் தேவா, இப்போது நடனமும் ஆடியிருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தில் மேடையில் தோன்றி பாடுவதாக நடித்தார்.
ஆனால், தற்போது சூரியன் என்ற படத்தில் 'காதல் பண்ண போறியா கத்துத்தறேன் வாரியா' என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடி அசர வைத்திருக்கிறார். அதுவும் இந்தப் பாடலை பாடியிருப்பவர் வேறு யாருமல்ல, அவரின் தந்தை தேவாதான்.
இந்த கூத்தெல்லாம் சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படத்தில்தான். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கான கதையையும் பாண்டியனே எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். பவன்.
காதல் கோட்டை படம் மூலம் நல்ல திரைக்கதை அமைப்பாளருக்கான தேசிய விருதை அகத்தியன் பெற்றதுபோல், பவனும் விருதுகள் பெற வாழ்த்துவோம்.