இலக்கியமும் நடிப்பும்!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:49 IST)
குசேலன் படம் எரிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதற்காக ரஜினி, பி. வாசுவை விட கலங்கிப் போயிருப்பவர் பசுபதிதான். மிகவும் எதிர்பார்த்த படம். அதுவும் சூப்பர் ஸ்டார் நடித்தும் படம் தோல்வியடைய மிகவும் நொந்துபோனார்.

போஸ்டர்களில் கூட தன்னை சரியாக விளம்பரப்படுத்தவில்லை என்ற குறை இருந்தாலும் ரஜினிக்காக பொருத்துக் கொண்டார். இதற்காக சில படங்களைக் கூட மறுத்துவிட்டார்.

ஆனாலும், தன் திறமைக்கு எல்லா மக்கள் மத்தியில் இருந்தும் பாராட்டு பெற்றிருப்பதை குறிப்பிட்டு சொல்கிறார். மேலும் தற்போது வெளியாக இருக்கும் 'வெடிகுண்டு முருகேசன்' படம் தன்னை இன்னும் ஒருபடி உயர்த்திக்காட்டுமாம்.

வெடிகுண்டு முருகேசன் என்று பெயர் இருந்தாலும், ஹோட்டல்களுக்கு தண்ணீர் சள்ளை செய்பவராக நடித்திருக்கிறார். நடிப்பதோடு இலக்கிய புத்தகங்கள் படிப்பது, இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம்.

நடிப்பதற்கு வந்தபின் படிப்பது மட்டும்தானாம். கூட்டங்களுக்கு போக முடியவில்லையே என்று வருத்தம் இருந்துகொண்டுதான் இருக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்