சிம்புவை சீண்டும் நடிகை!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:43 IST)
சிம்புவால் நடிக்கத் தெரியவில்லை என்று முத்திரை குத்தப்பட்டு படத்திலிருந்து நீக்கப்பட்டவர் லேகா வாஷிங்டன்.

கெட்டவன், சிம்பு நடிப்பதாக பிரமாண்டமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, பதிமூன்று நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ரூ.12 கோடி வரை செலவு செய்யத் தயார் என்று கூறினார் பரதன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஸ்வநாதன்.

சிம்புவின் ஜோடி லேகா வாஷிங்டன்தான். பதிமூன்று நாட்கள் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் செலவான நிலையில், லேகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை, அவருக்கு பதிலாக வேறு நடிகை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, ஏற்பட்ட மனஸ்தாபத்தில் படம் நிறுத்தப்பட்டது.

இப்போது அதே லேகா 'ஜெயம் கொண்டான்' படத்தில், அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஜெயம் கொண்டான் படத்தை சிம்பு பார்த்துவிட்ட தகவல் லேகாவுக்கு வர, சிம்புவிடமிருந்து பாராட்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி பாராட்டி, நடிக்க கூப்பிட்டால், 'ஸாரி சிம்பு நான் ரொம்ப பிஸி' என்று மூக்கறுக்கவும் தயாராயிருக்கிறார் லேகா. இதை கேள்விப்பட்ட சிம்பு நண்பர்கள் முன் கொதித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்