என்னதாம் சிம்பு அடாவடி பையன் என்று பெயர் எடுத்தாலும், பெண்களுக்கு மட்டுமல்லாமல் சில நடிகைகளுக்கும் அவரை ரொம்பவே பிடித்திருக்கிறது.
அதுவும் சில இளம் நடிகைகள் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் பிரியப்படுகிறார்கள். அப்படி காதலுக்கு முன் நடிக்கப் பிரியப்பட்டவர்தான் நயன்தாரா. அதன்பின் இருவர் மனமும் பிளவுபட பிரிந்து போனார்கள்.
தற்போது சிம்புவுடன் நடிக்க ஆசைப்படுபவர் சினேகா உல்லால். இந்தியில் 'லக்கி' என்ற படத்தில் சல்மான் கானுடன் நடித்தவர்.
தற்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'என்னைத் தெரியுமா?' தெலுங்கில் வெளியான 'நேனு நீக்கு தெலுசா?' என்ற படத்தின் ரீ-மேக்தான் 'என்னைத் தெரியுமா?'.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் குமார்தான் இப்படத்தின் ஹீரோ. மேலும் இப்படத்தில் வரும் தண்ணி கருத்திருச்சி என்ற ரீ-மிக்ஸ் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். பாடியதோடு உல்லால் ஆசையையும் நிறைவேத்துங்க சிம்பு.