தலைகாட்டாத வாரிசுகள்!

சனி, 13 செப்டம்பர் 2008 (16:49 IST)
நடிகர் விஜய் தன் பிள்ளைகளை வெளி உலகத்திற்கு காட்டுவதில்லை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். காரணம் தன் பிள்ளை என்று வெளியாருக்கும், அவர்கள் படிக்கும் பள்ளிக் கூடத்திலும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதுதான்.

அதனால்தான் இதுவரை அவரின் மகன் சஞ்சய் படமும், மகளின் படமும் வெளிவரவேயில்லை. கவனக்குறைவாக ஒரு பத்திரிக்கையில் படம் வரவே, பின் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், அஜித் அதற்கு நேர்மாறானவர். தன் மகள் அனோஸ்காவை முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு தூக்கிச் செல்கின்றனர். ஆனால், அவள் பிரபலமான நடிகர்-நடிகையின் பிள்ளை என்று அவளுக்குள்ளேயே ஒரு கர்வம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

அப்பா செல்லமாக வளர்ந்து வரும் அனோஸ்காவை ஷூட்டிங் முடிந்து வந்ததும் கொஞ்சுவதைத்தான் முதல் வேலையாக வைத்துள்ளார் அஜித். அதேபோல் ஷாலியினியிடமே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்குமாம் இந்தச் சுட்டி.

வெப்துனியாவைப் படிக்கவும்