இத்தேஷ் ஜெபக் தயாரிப்பில் ஜெயம் ரவி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:09 IST)
பேராண்மையில் நடித்துவரும் ஜெயம் ரவி, விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

தாம்தூம் வெற்றி பெற்றதில் அதிக மகிழ்ச்சி ஜெயம் ரவிக்கு. அந்த சந்தோஷத்துடன் 10 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடியவர், இத்தேஷ் ஜெபக் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி என்று தொடர்ந்து ஹிட் கொடுத்த இத்தேஷ் ஜெபக், வி.வி. கிரியேஷனுடன் இணைந்து பந்தயம் படத்தை தயாரித்து வருகிறார். பொன்ராமன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் இவரே தயாரிக்கிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்